Tuesday, April 27, 2010

நீ...ஏன் அழுகின்றாய் வெண்ணிலாவே



அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...
கள்ளமில்லா உன் முகத்தில்
கண்ணீர் ஏன் கொட்டுகின்றது?..
வெள்ளை போன்ற உன் முகத்தில்
வீழ்ந்து கொட்டும் கண்ணீர் துளிகள்
விடாமல் கொட்டுகின்றதே ஏன்?...
ஒவ்வொரு துளி கண்ணீரிலும்
உனக்கோர் சோக கதையுண்டோ?
துளி துளியாய் சிந்தும் கண்ணீரில்
நான் என்னுள் துவண்டு போகின்றேன்
உன் துயர்துடைத்து துயரம் நீக்க
என் உள்ளமும் துடிதுடிக்கின்றது
உன் சோகத்தோடு நானும் உன்னோடு
சோடி சேர்ந்து வரப்போகிறேன்

வானத்தில் மேகத்தோடு மேகமாய்
நாமும் ஒன்றாய் கலந்து விடுவோம்
அங்கிருந்து நம்சோக கண்ணீரை
மேகக்கண்ணீருடன் சேர்த்து மழையாய்
இந்த பூமியை நனைத்திடுவோம்
வா பெண்ணே வா….

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?
காதல் கொண்டாயா ?
இல்லையாரிடமாவது களங்கப்பட்டாயா?
சொல் பெண்ணே சொல்..
உன்சோகத்தில் எனக்கும் கொஞ்சம் தருவாயா??..
இல்லா விட்டால் நான் விடை பெறுகிறேன்...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1 comment:

Learn said...

மிகவும் அருமையான ஆழமான வரிகள் வாழ்த்துக்கள்