Wednesday, April 28, 2010

ஒரு நட்பு பிரிகிறது..


உன் ஞாபகங்கள்
எனக்குள்
உறைகின்றபோது
தவிப்புகள் - இதயத்தின்
தழும்புகளை உரசி
இனம்புரியாத இன்ப
வலிகளுக்குள்
எனை
சிறைப்பிடித்துக் கொள்கிறது...

எங்கோ ஓர் மூலையில்
தினமும் எனக்குள்
ரீங்காரமிடும் உன்
மௌன கீதங்களை
சுவாசித்துக் கொள்கின்றேன்...

தென்னங்கீற்றின்
சலசலப்பையும் - இளம்
தென்றலின் மென்மையினையும்
ரசிப்பதை நான்
மறந்து விட்டேன், ஏன்?
இவை இரண்டும்
உன்னிடம் இணைந்திருப்பதனால்...


பிரயமே!..
பாதியில் வந்து
ரயில் ஸ்னேகமாய் - நம்
நட்பு பிரிவதை எண்ணி
கலங்குதடி மனது...

இதயம் விம்மிக் கொள்கிறது..
விழிகள் இரண்டும்
கடல் நீரை
கடன் வாங்கிக் கொள்கிறது...

எனக்குள் கலந்தவளே
எனை நீ....
நினைக்க மறந்தாலும்
உனை மறக்க நினைக்காதடி
இவன் மனது...

உன்னிடம்
கடைசியாய்
ஒன்று கேட்கின்றேன்
இடையினில் வந்த
நம் நட்பை
இடையினில் நிறுத்திவிடாதே!....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்புடன்
முபிஸ்

6 comments:

Unknown said...

super mufees arumayana varikal unpol valthukkal nanpaa

Mufeesahida said...

நன்றி றிபாஸ்

Kousalya Raj said...

romba arumainka unka kavithai. valththukal

Unknown said...

நல்லா இருக்குங்க

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை .........வாழ்த்துகள்

poonga vanam said...

மிகவும் அருமையான வரிகள்
அருமை முபீஸ்.வாழ்த்துக்கள்.