Monday, July 12, 2010

காலம் காட்டிய முதல் பிரிவு....


நம் முதல் அறிமுகம்
தொலைவில் இருந்து
தொலை பேசியில்
பேசிய சில நிமிடம்.....

மறு நிமிடம்
முதல் சந்திப்பு
நம் இருவரின் திருமணத்தில்
இன்பமான சில நாற்கள்
மின்னலாய் வந்து போனது

பிரிவு என்றால்
என்னவென்று தெரியாதவன்
ஒன்றும் புரியாதவன்..
உன்னால்
உணர்ந்து கொண்டான்..!
சவுதி என்னும் சாக்கடையாள்
மின்னலை விட வேகமாய்
வந்தது நம் இருவரின் முதல்
பிரிவு...!

உன்னை பிரிந்து வந்த
சில நிமிடத்தில்
இருந்து இன்று வரை
என்னை வாட்டுகிறது
என் எதிரியான
இந்த பிரிவு காலம்
மீண்டும் பிறக்குமா
நம் பிரிந்த காலம்

பிறக்க போகும் பொன்னான
காலத்திலாவது இணைந்திருப்போம்
அந்த பொற்காலத்தை நினைத்து
எதீர் நோக்கியவனாக..
காலம் இதற்கு பதில் கூறட்டும்?...
இது காலத்தின் கோலமா
இல்லை
என் சோகத்தின் நேரமா...!
ஒன்றும் புரியாதவனாக...!
தனிமையில் நான் இருக்கையில்....

Tuesday, July 6, 2010

ரசித்தவையில் ஒரு கவிதை

மூங்கில் நுனிப் பனியை
புகழ்கின்றோம்
மூக்கின் நுனிப்பனியைத்
துடைக்கின்றோம்

இரண்டிலும் பனி
பார்வையில் பிணி

பச்சை மரக்காட்டிடையும்
மரங் கொத்தி
தேடுவதென்னவோ
பட்ட மரம்

நீர் மேல் நிலவு
நிமிடத்தில் உடையும்
நிமிடத்தில் சேரும்
நிலவுக்குக் கவலையில்லை

வடி கட்டிப் போகும்
அமுதத்தைப் பாரார்
வடியில் மிஞ்சும்
மிச்சத்தைப் பார்ப்பார்

காலையும் மாலையும்
அழித்து அழித்துப்
போடுகின்றது
அழகழகான சித்திரம்

வானமும்
பகலிலும் இரவிலும்
பொட்டு வைத்துப்
பார்க்கின்றது

பச்சைச் சேலையில்
பள பளக்கும்
நீர்க்கரை கட்டி
பூமியும் அழகுதான்

இயற்கை சிரிக்கின்றது
மனிதன் அழுகின்றான்

எல்லைகள் நட்டு
தொல்லைகள் பெற்று
கோடுகள் கிழித்து
கொடுமைகள் செய்து

மனிதன் அழுகின்றான்
இயற்கை சிரிக்கின்றது


ரசித்தது