Thursday, May 20, 2010

நண்பன் அனுப்பிய வாழ்த்து


குணத்தின் சீலன்
பாசத்தின் இமயம்
ஆருயிர் நண்பனே முபீஸ்
உம் திருமணத்தை வாழ்த்த
வழி செய்த இறைவனுக்கே
எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்

இறையடி சேர்ந்த தந்தையின்
பாசமகனாய் பிறந்து
அருமைத்தாய் ஸீனத்தின்
மனங்குளிர்நத செவ்வல் நீ

உன் மனதை கொள்ளையடித்து
உன்னை கிறங்கச்செய்த
அரேபிய தேசத்தில்
அழகாய் மலர்ந்த பதுமை
சாதுவான ஷாஹிதாவை
உன் வாழ்வின் விளக்காய்
ஏற்கத்துணிந்த நீ
ஏற்றம் கொண்டு
மலராய் ஏந்தும் தருணமிது

முழு நிலவாய்
முகம்காட்டும் பௌர்ணமி போல்
முழு மனிதனாய் மாறுகின்ற
முதல் படியிது
முகம்மது நபி(ஸல்)யின்
முழுமை வாழ்வை
முதன்மையாக்கிடு தோழா

இல்லற வாழ்வில்
இன்பங்கள் பல
இங்கிதமாய் கண்டு
இனிய செல்வங்கள்
இளமையில் அடைந்து
ஈருலகிலும் சுவர்க்கம் காண
வாகை அமைத்திடு தோழா...

ஆண்டாண்டு காலம்
ஆருயிர் தோழர்களாய்
ஆயுள் இறுதி வரை
ஆலம் போற்றும் துணைவர்களாய்
இனிதே வாழ்ந்திடு தோழா...

உன் உறவுகளாய்
உன்னருகில் அமர்ந்து
உன்துணை நடந்து
உன்துணையிடம் சேர்த்ததாய்
ஊக்கம் கொண்டு
உறவு கலந்திடு
உறவுகள் கூடி
உளமாற வாழ்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க
******************************************
நண்பன்
நேசமுடன் ஹாசிம்


Thursday, May 6, 2010

உன் தரிசனத்திற்காக......


தினமும்
நிலாச் சோலையில்
தென்றலை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளைத் தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
நான் கைதாகியபோது
என்
கற்பனையின் கதவுகள்
திறந்து கொள்கிறது...

நிலவின்
மெல்லிய கீற்றுக்களில்
வானவில் தூரிகையில்
பிரம்மனின்
கலைகளின் உச்சத்தில்
பூமிக்கு மின்னலாய்
பிறந்தவள் நீயடி...
உன் மலர் முகத்தின்
தரசனத்திற்காய்
காத்துக் கிடக்கிறது..
இவன் மனசி.........MS
**************************************************

Sunday, May 2, 2010

என்னவளே....


இதயங்கள்
இரண்டும் மௌனமாய்
பேசிக் கொள்ளும் வேளை
விழிகள் நான்கும்
நாணத்தால்
மௌனங்களை
விலை பேசிக் கொள்கிறது...

என்னவளே
நம்
உறவுகள்
இணைய நினைக்கையில்
உதடுகள்
ஏன்
தூரமாகிப் போகிறது?.....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சந்தடியற்ற வேளையிலும்
ஒற்றைக் கண்ணாடியில்
உடைந்த விம்பமாய்
என்
விம்பம் மட்டும்
எனக்குள்
எதிரொலிக்கறிது.....
*********************************************

தினமும்
என் - கனவில்
எங்கிருந்தோ - ஒரு
புன்னகை
என் செவிகளைத் தடவி
மீண்டும்
என்னோடு
உலா வரத்துடிக்கிறது
இதயம் ஏனோ
எனைக் கெஞ்சி
வஞ்சிக்கிறது...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கற்பனையின்
உச்சத்தில் நான்
ஆனாலும் வார்த்தைகள்
சில நேரம்
என்னுடன்
தர்க்கித்துக் கொள்கிறதே
ஏன் - நான்
வார்த்தைகள்
சேமிக்க முடியாத - ஏழை
கவிஞனா?....
=======================================

மேகத்தின்
வெண்பட்டாளைக்குள்
முகம் புதைத்து
மெல்ல விலகும்
மென் நிலாவும்
என்னிடம்
இரவல் கேட்கிறது
என் கற்பனை வானை...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கவித்துளிகள் காட்சியுடன்


கற்பனைத் துளிகளைக்
கர்ப்பமாக்கி
கவிக்குஞ்சுகளாய்
பிரசவிக்கிறேன்
அதோ..
வானவெளியில்
விண்மீன்களாய் - என்
கவிக்குஞ்சுகள்
கண்சிமிட்டிக் கொள்கிறது...
-------------------------------------------------