Sunday, October 3, 2010

உறவுகளின் கசப்பான நினைவுகள்..

என்
தேசத்தில் - நேற்றுகள்
தொலைந்து
நாளைகள் அண்மிக்கிறது
ஏன்
காலதேவன் சக்கரத்தில்
நானும்
ஒரு அச்சாணியோ...

உறவுகளின்
கசப்பான நினைவுகள்
உள்ளத்தை
உருக்குலைத்து
ஊனமாக்கியபோதும்
உருவம்
ஏனோ
சிறு நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது...

மானிடச் சாக்கடைக்குள்
கைதுடைக்கும்
கைக்குட்டையாய்
ஆனபோதும்
வெண்ணிலாவின்
களங்கமாய்
எமக்குள்ளும் ஒரு சாக்கடை
நாமும்
என்ன விதிவிலக்கா...

பிரம்மனின்
நாடகத்தில் - நாமும்
ஒரு பாத்திரம்தான்
வேஷங்கள்
கலைகையில்
தேகங்கள்
நீரில் போட்ட கோலமாய்
தடமின்றிப் போகும்

அதை நீர் உணர்வாய் சீக்கிரம்....