Tuesday, April 27, 2010

உன் அழகே....



உன் அழகே...
என்
பேனாவின் முத்தமழையில்
கவி மொட்டுக்கள்
புஷ்பித்துக் கொள்கிறது
ஆனாலும்
அவை ஒவ்வொன்றும்
உன் மலர் முகத்தின்
தரிசனத்திற்காய்
காத்துக் கிடக்கிறது....
உன் பாதங்கள்
பவனி வரும்
பாதையோரங்களில்
நந்தவனப் பனித்துளிகள்
தவம் செய்து
ஏமாந்து போவதொன்றும்
விந்தையல்ல ஆனால்
என்
வார்த்தைகளில் சிக்கிடாத
உன் அழகே
விந்தையிலும் விந்தையடி..
>>>>>>>MufeeSahida>>>>>>>>>

உன் நினைவுடன் - உனக்காக

Photo Frames by Wishafriend

உன்னுடன்....
வந்து வாழ்ந்த உறவை
வாவென்று கையுடன்அழைத்து செல்லும்…
வண்ணக்கனவுகளும் கலைந்து போகும்...
வசைபாடி இழுத்து செல்லும்
வார்த்தையில்லை
வேதனைகளுடன்
வருத்தங்களை பகிர்ந்து கொள்ள
நீ....என் அருகில் இல்லை
வருந்துகின்றேன்
வடிக்கின்றேன்
வடிந்தோடும் கண்ணீருடன்....
வாழ்வில் உமக்கு
வருடிக்கொடுக்க
என்
வஞ்சகமில்லா இரு கரங்களும்
வருகின்றது வாழ்நாளில் என்றும்
உனக்காக...
>>>>>>Mufees & Sahida<<<<<<<<

Monday, April 26, 2010

ஒரு கவிஞனின் தோல்வி




வார்த்தைகள் சுகமானது
கவிதைகளை இவன் காதலித்த போது....
முட்களும் மலர் மொட்டுகளாய்
புஷ்பித்து கொண்டது
வாசங்களை மீண்டும்
இவன் புரட்டிய போது...
கவிஞனின் நந்தவனத்தில்
கவி புஷ்பங்களை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளை தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
கைதாகிய போது
கற்பனையே தாகம் தீர்த்தது...

ஆனால் இன்று...
இவன் இதயத்தின்
வாசற் கதவுகளை
பாவையவள் திறந்தபோது
இரவுகள் நீளமானது
இதயம் விம்மிக் கொண்டது
விழிகளின் ஈரத்துளிகளை
பேனா இரவல்
வாங்கிக் கொண்டது

காதலின் சாக்கடைக்குள்
இதயம் புதைந்தபோது
தினமும்
காகிதங்களை
பேனாவின் கூர்முனைகள்
முத்தமிட்டு
நனைத்துக் கொள்கிறது..
பேனாவை காகிதம்
அனைத்து கொள்கிறது...
>>>>>>>>>M & S <<<<<<<<

என்னவளே...இது உனக்காக


மேகத்தின்
வெண்பட்டாடைக்குள்
முகம் புதைத்து
மெல்ல விலகும்
மென் நிலாவும்
என்னிடம்
உன் அழகை சொல்லி வர்ணிக்கின்றது...


உன் அழகை கவிகளால் எழுதுவதற்கு
எத்தனிக்கும் போதெல்லாம்
கனவுகள் வந்துவார்த்தைகளைக்
கலைத்துச் செல்கின்றன...
கற்பனைகள் வந்து
என் கவிதையை எடுத்துச் செல்கின்றன..
உன்னை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் போதாதுடி......
என்னவளே...


இது உனக்காக - Mufees&Sahida