
வார்த்தைகள் சுகமானது
கவிதைகளை இவன் காதலித்த போது....
முட்களும் மலர் மொட்டுகளாய்
புஷ்பித்து கொண்டது
வாசங்களை மீண்டும்
இவன் புரட்டிய போது...
கவிஞனின் நந்தவனத்தில்
கவி புஷ்பங்களை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளை தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
கைதாகிய போது
கற்பனையே தாகம் தீர்த்தது...
ஆனால் இன்று...
இவன் இதயத்தின்
வாசற் கதவுகளை
பாவையவள் திறந்தபோது
இரவுகள் நீளமானது
இதயம் விம்மிக் கொண்டது
விழிகளின் ஈரத்துளிகளை
பேனா இரவல்
வாங்கிக் கொண்டது
காதலின் சாக்கடைக்குள்
இதயம் புதைந்தபோது
தினமும்
காகிதங்களை
பேனாவின் கூர்முனைகள்
முத்தமிட்டு
நனைத்துக் கொள்கிறது..
பேனாவை காகிதம்
அனைத்து கொள்கிறது...
>>>>>>>>>M & S <<<<<<<<
No comments:
Post a Comment