
தினமும்
நிலாச் சோலையில்
தென்றலை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளைத் தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
நான் கைதாகியபோது
என்
கற்பனையின் கதவுகள்
திறந்து கொள்கிறது...
நிலவின்
மெல்லிய கீற்றுக்களில்
வானவில் தூரிகையில்
பிரம்மனின்
கலைகளின் உச்சத்தில்
பூமிக்கு மின்னலாய்
பிறந்தவள் நீயடி...
உன் மலர் முகத்தின்
தரசனத்திற்காய்
காத்துக் கிடக்கிறது..
இவன் மனசி.........MS
**************************************************
3 comments:
மிகவும் அருமையாக கவிகள், விரும்பினால் நமது தமிழ்த்தோட்டத்திலும் பூக்க விடலாமே....
super nanpaa arumayana varikal
அருமையான வரிகள் முபிஸ் சார்
Post a Comment