.
Thursday, February 24, 2011
Saturday, February 5, 2011
Sunday, October 17, 2010
Sunday, October 3, 2010
உறவுகளின் கசப்பான நினைவுகள்..
தேசத்தில் - நேற்றுகள்
தொலைந்து
நாளைகள் அண்மிக்கிறது
ஏன்
காலதேவன் சக்கரத்தில்
நானும்
ஒரு அச்சாணியோ...
உறவுகளின்
கசப்பான நினைவுகள்
உள்ளத்தை
உருக்குலைத்து
ஊனமாக்கியபோதும்
உருவம்
ஏனோ
சிறு நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது...
மானிடச் சாக்கடைக்குள்
கைதுடைக்கும்
கைக்குட்டையாய்
ஆனபோதும்
வெண்ணிலாவின்
களங்கமாய்
எமக்குள்ளும் ஒரு சாக்கடை
நாமும்
என்ன விதிவிலக்கா...
பிரம்மனின்
நாடகத்தில் - நாமும்
ஒரு பாத்திரம்தான்
வேஷங்கள்
கலைகையில்
தேகங்கள்
நீரில் போட்ட கோலமாய்
தடமின்றிப் போகும்
அதை நீர் உணர்வாய் சீக்கிரம்....
Monday, July 12, 2010
காலம் காட்டிய முதல் பிரிவு....
தொலைவில் இருந்து
தொலை பேசியில்
பேசிய சில நிமிடம்.....
மறு நிமிடம்
முதல் சந்திப்பு
நம் இருவரின் திருமணத்தில்
இன்பமான சில நாற்கள்
மின்னலாய் வந்து போனது
பிரிவு என்றால்
என்னவென்று தெரியாதவன்
ஒன்றும் புரியாதவன்..
உன்னால்
உணர்ந்து கொண்டான்..!
சவுதி என்னும் சாக்கடையாள்
மின்னலை விட வேகமாய்
வந்தது நம் இருவரின் முதல்
பிரிவு...!
உன்னை பிரிந்து வந்த
சில நிமிடத்தில்
இருந்து இன்று வரை
என்னை வாட்டுகிறது
என் எதிரியான
இந்த பிரிவு காலம்
மீண்டும் பிறக்குமா
நம் பிரிந்த காலம்
பிறக்க போகும் பொன்னான
காலத்திலாவது இணைந்திருப்போம்
அந்த பொற்காலத்தை நினைத்து
எதீர் நோக்கியவனாக..
காலம் இதற்கு பதில் கூறட்டும்?...
இது காலத்தின் கோலமா
இல்லை
என் சோகத்தின் நேரமா...!
ஒன்றும் புரியாதவனாக...!
தனிமையில் நான் இருக்கையில்....
Tuesday, July 6, 2010
ரசித்தவையில் ஒரு கவிதை
புகழ்கின்றோம்
மூக்கின் நுனிப்பனியைத்
துடைக்கின்றோம்
இரண்டிலும் பனி
பார்வையில் பிணி
பச்சை மரக்காட்டிடையும்
மரங் கொத்தி
தேடுவதென்னவோ
பட்ட மரம்
நீர் மேல் நிலவு
நிமிடத்தில் உடையும்
நிமிடத்தில் சேரும்
நிலவுக்குக் கவலையில்லை
வடி கட்டிப் போகும்
அமுதத்தைப் பாரார்
வடியில் மிஞ்சும்
மிச்சத்தைப் பார்ப்பார்
காலையும் மாலையும்
அழித்து அழித்துப்
போடுகின்றது
அழகழகான சித்திரம்
வானமும்
பகலிலும் இரவிலும்
பொட்டு வைத்துப்
பார்க்கின்றது
பச்சைச் சேலையில்
பள பளக்கும்
நீர்க்கரை கட்டி
பூமியும் அழகுதான்
இயற்கை சிரிக்கின்றது
மனிதன் அழுகின்றான்
எல்லைகள் நட்டு
தொல்லைகள் பெற்று
கோடுகள் கிழித்து
கொடுமைகள் செய்து
மனிதன் அழுகின்றான்
இயற்கை சிரிக்கின்றது
ரசித்தது
Thursday, May 20, 2010
நண்பன் அனுப்பிய வாழ்த்து
குணத்தின் சீலன்
பாசத்தின் இமயம்
ஆருயிர் நண்பனே முபீஸ்
உம் திருமணத்தை வாழ்த்த
வழி செய்த இறைவனுக்கே
எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்
இறையடி சேர்ந்த தந்தையின்
பாசமகனாய் பிறந்து
அருமைத்தாய் ஸீனத்தின்
மனங்குளிர்நத செவ்வல் நீ
உன் மனதை கொள்ளையடித்து
உன்னை கிறங்கச்செய்த
அரேபிய தேசத்தில்
அழகாய் மலர்ந்த பதுமை
சாதுவான ஷாஹிதாவை
உன் வாழ்வின் விளக்காய்
ஏற்கத்துணிந்த நீ
ஏற்றம் கொண்டு
மலராய் ஏந்தும் தருணமிது
முழு நிலவாய்
முகம்காட்டும் பௌர்ணமி போல்
முழு மனிதனாய் மாறுகின்ற
முதல் படியிது
முகம்மது நபி(ஸல்)யின்
முழுமை வாழ்வை
முதன்மையாக்கிடு தோழா
இல்லற வாழ்வில்
இன்பங்கள் பல
இங்கிதமாய் கண்டு
இனிய செல்வங்கள்
இளமையில் அடைந்து
ஈருலகிலும் சுவர்க்கம் காண
வாகை அமைத்திடு தோழா...
ஆண்டாண்டு காலம்
ஆருயிர் தோழர்களாய்
ஆயுள் இறுதி வரை
ஆலம் போற்றும் துணைவர்களாய்
இனிதே வாழ்ந்திடு தோழா...
உன் உறவுகளாய்
உன்னருகில் அமர்ந்து
உன்துணை நடந்து
உன்துணையிடம் சேர்த்ததாய்
ஊக்கம் கொண்டு
உறவு கலந்திடு
உறவுகள் கூடி
உளமாற வாழ்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க
******************************************
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Thursday, May 6, 2010
உன் தரிசனத்திற்காக......
தினமும்
நிலாச் சோலையில்
தென்றலை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளைத் தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
நான் கைதாகியபோது
என்
கற்பனையின் கதவுகள்
திறந்து கொள்கிறது...
நிலவின்
மெல்லிய கீற்றுக்களில்
வானவில் தூரிகையில்
பிரம்மனின்
கலைகளின் உச்சத்தில்
பூமிக்கு மின்னலாய்
பிறந்தவள் நீயடி...
உன் மலர் முகத்தின்
தரசனத்திற்காய்
காத்துக் கிடக்கிறது..
இவன் மனசி.........MS
**************************************************
Sunday, May 2, 2010
என்னவளே....
கவித்துளிகள் காட்சியுடன்
Friday, April 30, 2010
காத்திருக்கிறேன் உன் நினைவுகளுடன்..
அன்பே....
உன் நினைவுகள்
எனக்குள் உள்ளவரை..
உலகம் இருளாகவும்
என்னை நான் அறியாமல்
உன்னை நினைத்து கொண்டு..!
கண்ணை மூடினால்....
உன் கனவு
கண்ணாடி முன் நின்றால்....
உன் நினைவு
நிஜமாக...என் முன்னாடி எப்போது
வந்து நிற்பாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக....
மறணத்தின் முன்னாடியாவது
வருவாய் என....
>>>>>>>>>>>>>>>>M & S >>>>>>>>>>>>>>>
Wednesday, April 28, 2010
ஒரு நட்பு பிரிகிறது..
எனக்குள்
உறைகின்றபோது
தவிப்புகள் - இதயத்தின்
தழும்புகளை உரசி
இனம்புரியாத இன்ப
வலிகளுக்குள்
எனை
சிறைப்பிடித்துக் கொள்கிறது...
எங்கோ ஓர் மூலையில்
தினமும் எனக்குள்
ரீங்காரமிடும் உன்
மௌன கீதங்களை
சுவாசித்துக் கொள்கின்றேன்...
தென்னங்கீற்றின்
சலசலப்பையும் - இளம்
தென்றலின் மென்மையினையும்
ரசிப்பதை நான்
மறந்து விட்டேன், ஏன்?
இவை இரண்டும்
உன்னிடம் இணைந்திருப்பதனால்...
Tuesday, April 27, 2010
நீ...ஏன் அழுகின்றாய் வெண்ணிலாவே
நண்பனைப் பற்றி சில வரிகள்......
நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள். எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை. உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
நன்றி..
உங்கள் நண்பன் முபிஸ்